கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் பெருகவாழ்ந்தான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாலையூர் சுடுகாடு அருகே இறுதி ஊர்வலத்தில் சென்ற நபரை தாக்கி, தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்த – பாலையூர், கொம்புக்காரன் தெருவை சேர்ந்த ராசப்பா மகன் அசோக் @ அசோக்குமார் 32. என்ற HS ரௌடி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
முன்னதாக, இவர் மீது 1 கொலை முயற்சி வழக்கு, 5-அடிதடி வழக்கும், பெருகவாழ்ந்தான் காவல் நிலையத்தில் சரித்திரத்தாள் பதிவேடும் பராமரிக்கப்பட்டு வருகிறது.
சிறப்பாக செயல்பட்டு கொலை மிரட்டல் விடுத்த HS ரௌடியை கைது செய்த பெருகவாழ்ந்தான் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.ராஜேந்திரன் மற்றும் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார் M.Sc, (Agri)., அவர்கள் பாராட்டினார்கள்.
பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ரௌடிசத்தில் ஈடுபடும் நபர்கள், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், கஞ்சா, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை, கள்ளச்சந்தையில் மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc., (Agri)., அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.