தென்காசி: ஆலங்குளம் அருந்ததியர் காலனியைச் சேர்ந்தவர் பொன்தங்கமாரி 53. விவசாயி. இவர் சம்பவத்தன்று தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரை வழிமறித்த மூன்று பேர் கொண்ட கும்பல் கத்தியை காட்டி மிரட்டி ரூ.ஆயிரத்தை பதித்துக்கொண்டதோடு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பொன்தங்கமாரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட நடுத்தெருவை சேர்ந்த மாரியப்பன் 23, ரகு 24, முகேஷ் 19 ஆகிய மூன்று பேரை கைது செய்து சிறையிலடைத்தனர்.