தூத்துக்குடி: தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தகராறு செய்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது. தூத்துக்குடி கால்டுவெல்காலனி பகுதியைச் சேர்ந்த அழகுபிச்சை மகன் கிங்ஸ்வின் (30) என்பவர் (28.07.2023) தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி to திருச்செந்தூர் மெயின்ரோடு பகுதியில் உள்ள ஒரு கல்லூரி அருகே வந்து கொண்டிருந்தபோது அங்கு மதுபோதையில் வந்த மர்மநபர்கள் கிங்ஸ்வின்னிடம் தகராறு செய்து தவறாக பேசி அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து கிங்ஸ்வின் அன்று அளித்த புகாரின் பேரில் தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. கங்கைநாத பாண்டியன் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
தூத்துக்குடி அழகேசபுரம் பகுதியைச் சேர்ந்த உதயகுமார் மகன் சோலையப்பன் (எ) அபினாஷ் (19) மற்றும் தூத்துக்குடி சத்யாநகரைச் சேர்ந்த முருகன் மகன் சூரியபிரகாஷ் (20) ஆகிய இருவரும் மேற்படி கிங்ஸ்வின்னிடம் தகராறு செய்து அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதனையடுத்து மேற்படி போலீசார் குற்றவாளிகளான சோலையப்பன் (எ) அபினாஷ் மற்றும் சூரியபிரகாஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேற்படி கைது செய்யப்பட்டகுற்றவாளிகள் சோலையப்பன் (எ) அபினாஷ் மீது ஏற்கனவே ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், சூரியபிரகாஷ் மீது தென்பாகம் காவல் நிலையத்தில் கஞ்சா வழக்கு உட்பட 2 வழக்குகள் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.