தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின்படி கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேஷ் மேற்பார்வையில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. சுஜித் ஆனந்த் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில்பட்டி பண்ணை தோட்டத் தெருவில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் கோவில்பட்டி மார்க்கெட் ரோடு பகுதியை சேர்ந்த ஆறுமுகதுரை மகன் ராஜதுரை 28. என்பதும், அவர் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு தகராறு செய்து அரிவாளைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது.
உடனே மேற்படி போலீசார் குற்றவாளி ராஜதுரையை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி கைது செய்யப்பட்ட குற்றவாளி ராஜதுரை மீது ஏற்கனவே கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் கொலை முயற்சி உட்பட 6 வழக்குகளும், கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் கொலை மிரட்டல் உட்பட 5 வழக்குகளும் என 11 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.