திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காளவாய்கறை, SBI ATM அருகில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த கோபாலக்ருஷ்ணன் என்பவர் மீது, பெட்ரோல் பங்க்கிலிருந்து இருசக்கர வாகனத்தில் வெளியே வந்த நபர்கள் அவ்வழியே சென்ற மேற்படி நபர் மீது மோதுவது போல சென்று அச்சத்தை எற்படுத்தியுள்ளனர்.
இது குறித்து கோபாலக்ருஷ்ணன் கேட்ட போது அவரை வழி மறித்து கை மற்றும் கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மன்னார்குடி 1.மேலவீதியை சேர்ந்த பன்னீர் செல்வம் மகன் அரவிந்தன் -24, 2.அண்ணாமலை நாதர் சன்னதி தெருவை சேர்ந்த சந்திரன் மகன் விஜய் -26, 3.மாளிகை மேடு பகுதியை சேர்ந்த மகாலிங்கம் மகன் சண்முகசுந்தரம் -40 ஆகிய மூவர் மீதும் 6-பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறப்பாக செயல்பட்டு பொது இடத்தில் அடிதடியில் ஈடுபட்ட நபர்களை உடனடியாக கைது செய்த மன்னார்குடி நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.முருகன் மற்றும் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் பாராட்டினார்கள்.
பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ரௌடிசம், திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்பூர்வ கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc., (Agri)., அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.