விருதுநகர் : பாலிபேக் நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர்களை, கொத்தடிமையாக பயன்படுத்தி வேலை வாங்குவதாக, மாவட்ட ஆட்சியருக்கு வந்த புகாரையடுத்து, சிவகாசி சார் ஆட்சியர் திரு..பிரிதிவிராஜ் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி, பாலிபேக் அச்சகத்தில் கொத்தடிமை தொழிலாளர்களாக இருந்த, 14 குழந்தை தொழிலாளர்களை, நேற்று முன் தினம் இரவு மீட்டனர். மீட்கப்பட்டவர்களை விருதுநகர் கூர் நோக்கு இல்லத்தில் பாதுகாப்பாக தங்க வைத்து,
அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கொத்தடிமையாக, குழந்தை தொழிலாளர்களை வைத்திருந்தது குறித்து, விஸ்வநத்தம் கிராம நிர்வாக அதிகாரி காமராஜ், சிவகாசி நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.