தூத்துக்குடி: தூத்துக்குடிமாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கே. இளம்பகவத் இ.ஆ.ப அவர்கள் உத்தரவின் பேரில் எப்போதும்வென்றான் காவல் நிலைய கொலை மிரட்டல் வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியான தற்போது திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் பகுதியில் வசிப்பவரும் முன்னதாக தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் காட்டுநாயக்கன்பட்டி பகுதியிலும் வசித்து வந்தவருமான மாரியப்பன் மகன் முனியசாமி 47. என்பவரை இன்று எப்போதும்வென்றான் காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.