சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிஎஸ்சி நகரில் அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் காரைக்குடி அண்ணா நகரை சேர்ந்த லக்ஷ்மணன் என்பவரை வாளால் வெட்டி விட்டு சென்றனர். பின்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர். தா. செந்தில்குமார் அவர்கள் உத்தரவின்பேரில் காரைக்குடி உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வினோஜி, ஆய்வாளர் திரு. ராஜ்குமார் சார்பு ஆய்வாளர் திரு. முத்துகிருஷ்ணன், திரு.தவமுனி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு இவ்வழக்கின் முக்கிய குற்றவாளிகளான காரைக்குடியை சேர்ந்த மணி ஆகியோரை கொலை நடந்த மூன்று மணி நேரத்திற்குள் கைது செய்தனர்.
மேலும் கொலைக்கு உடந்தையாக இருந்த மணியின் தந்தையான சரவணன் மற்றும் அண்ணியான அம்சவல்லி ஆகியோரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேற்படி காவல் துறையினரை காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்கள். இவ்வழக்கில் முதல்கட்ட விசாரணையில் லட்சுமணன் என்பவர் பணம் கொடுக்கல் வாங்கல் தொழில் செய்து வந்ததாகவும், மேற்படி பணம் வாங்க சென்றபோது, அம்சவல்லி தனியாக இருந்ததை பார்த்து அவரிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார். இதனை அம்சவள்ளி கணவரின் தம்பியான மணியிடம் தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த மணி மற்றும் அவரது நண்பர்கள் மேற்படி நபரை கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்