சென்னை: அபிராமபுரம் பகுதியைச் சேர்ந்த நரசிம்மன் 26 தனது நண்பர் சுந்தருடன் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் கடந்த அபிராமபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, அங்கு நின்று கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ், பிரகாஷ், மற்றும் சுரேஷ் ஆகிய மூவரும் முன்விரோதம் காரணமாக மேற்படி நரசிம்மன் மற்றும் சுந்தர் வந்த இருசக்கர வாகனத்தை வழிமறித்து இருவரையும் கத்தியால் தாக்கியது சம்மந்தமாக E4 அபிராமபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டதில் குற்றவாளிகளான 1.சதீஷ், 23 ஆர்.ஏ.புரம் 2.பிரகாஷ், (வ/26) ஆர்.ஏ.புரம் 3.சுரேஷ், (வ/28) ஆர்.ஏ.புரம் ஆகிய மூவரை கைது செய்தனர்.
இவ்வழக்கு தொடர்பாக, சென்னை 5வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், E4 காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் முறையாக சாட்சிகளை ஆஜர்படுத்தி வந்த நிலையில், நீதிமன்ற விசாரணை முடிவடைந்து 14.07.2021 அன்று குற்றவாளிகள் சதீஷ் மற்றும் பிரகாஷ் ஆகிய இருவருக்கும் 10 வருட கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.2,000/- அபராதமும், விதித்து, கனம் நீதிபதி அவர்கள் தீர்ப்பு வழங்கினார். மற்றொரு குற்றவாளியான சுரேஷ் விடுதலை செய்யப்பட்டார்.