மதுரை : மதுரை, பத்மா தியேட்டர் அருகே நேற்று (17.12.2019) V2-அவனியாபுரம் சட்டம் & ஒழுங்கு காவல் உதவி ஆய்வாளர் திரு.காசி மற்றும் ரோந்து காவலர்கள் திரு.பரமசிவம், திரு.லோகநாதன் மற்றும் திரு.சேக் அப்துல் காதர் ஆகியோர்கரளுடன் ரோந்து பணியில் இருந்தபோது சந்தேகப்படும்படியாக நின்றிருந்த மணி மாறன் என்ற நொண்டி மணி மாறன் (29), கார்த்தி என்ற குட்டை கார்த்தி (25), கண்ணாயிரமூர்த்தி (28), முருகன் (28)ஆகிய நால்வரிடமும் விசாரணை முடித்து அவர்களை சோதனை செய்தபோது அவர்கள் முதுகுக்குப் பின்னால் ஆபத்தை விளைவிக்கக்கூடிய வாள்கள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் அவர்களிடம் காவல் ஆய்வாளர் திரு பெத்துராஜ் அவர்கள் விசாரித்தபோது, முன்விரோதம் காரணமாக தனது நண்பரை ஏற்கனவே கத்தியால் தாக்கிய ஒரு நபரை கொலை செய்ய ஆளுக்கு ஒரு வாளை வைத்துக்கொண்டு பத்மா தியேட்டர் காலனி அருகே நின்று, கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிக் கொண்டிருந்ததாகவும் விசாரணை முடிவில் தெரிவித்தனர்.
மேலும் மேற்படி நான்கு நபர்கள் மீதும் கொலை வழக்கு இருப்பதும் தெரியவந்தது. எனவே அவர்களை காவல் ஆய்வாளர் அவர்கள் கைது செய்து அவர்களிடமிருந்து நான்கு வாள்களை கைப்பற்றி நீதிமன்ற காவலுக்கு அனுப்பினார். காவல்துறையினர் மேற்படி காலை குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் முன்கூட்டியே தடுத்து, நான்கு நபர்களையும் பிடித்து சிறப்பாக விசாரணை மேற்கொண்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களை மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம்,IPS., அவர்கள் பாராட்டினார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்
மதுரை மதுரை