சென்னை: சென்னை பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த வல்லரசு , வ / 22 மற்றும் அவரது நண்பர்கள் சிலர் சேர்ந்து சில மாதங்களுக்கு முன்பு கார்த்திகேயன் ( எ ) வெங்காயம் என்பவரது நண்பர் அகஸ்டீன் என்பவரை கத்தியால் வெட்டியது தொடர்பாக S10 பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் அன்று இரவு பெரும்பாக்கம் 132 வது பிளாக் பின்புறமுள்ள மைதானத்தின் அருகில் கொலை செய்யும் நோக்கத்தில் கையில் கத்தியுடன் கார்த்திகேயன் ( எ ) வெங்காயம் மற்றும் அவரது நண்பர்கள் நின்று கொண்டிருப்பதை பார்த்த வல்லரசுவின் தந்தை ரத்தினகுமார் , வ / 46 என்பவர் S16 பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
S16 பெரும்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் உடனே சம்பவயிடத்திற்கு சென்று முன்விரோதம் காரணமாக புகார்தாரரின் மகன் வல்லரசுவை கொலை செய்யும் நோக்கத்தில் கத்தியுடன் இருந்த 1.கார்த்திகேயன் ( எ ) வெங்காயம், வ/21, பெரும்பாக்கம் 2.ரஞ்சித், வ/ 22 பெரும்பாக்கம் 3.சரத்குமார் ( எ ) விஸ்வாபாய், வ/26 பெரும்பாக்கம் ஆகிய 3 நபர்களையும் செய்தனர் . அவர்களிடமிருந்து 2 கத்தி கைப்பற்றப்பட்டு, அவர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.