திண்டுக்கல்: நேற்று இரவு இவருக்கும் இவரது மனைவி ஈஸ்வரிக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறின் போது வனராஜ் மனைவி ஈஸ்வரியை கத்தியால் குத்தியுள்ளார். இந்த கத்திக்குத்தில் ஈஸ்வரிக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ஈஸ்வரியின் அலறல் சத்தம் கேட்டு, அருகிலிருந்து, ஓடிவந்த இவர்களது மகன்களலான முத்துச்சாமி(29), ஊர்காலன்(24) ஆகிய இருவரும் தாயை கத்தியால் குத்திய தந்தையை அங்கிருந்த உருட்டுக்கட்டையால் தலையில் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் வனராஜ் பலத்த காயமடைந்தார். பலத்த காயமடைந்த வனராஜை அக்கம்பக்கத்திலிருந்தவர்கள் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கிருந்து மேல் சிகிச்சைகாக மதுரை அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். அங்கு வனராஜ் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். கத்திக்குத்தில் கையில் படுகாயமடைந்த வனராஜின் மனைவி ஈஸ்வரி வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் தந்தையை உருட்டுக்கட்டையால் தாக்கி கொன்றதாக வழக்குப் பதிவு செய்து வனராஜின்… மகன்களான முத்துச்சாமி, ஊர்காலன் ஆகிய இருவரையும் கைது செய்து. பட்டிவீரன்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.