சென்னை: பூந்தமல்லி, மாவட்ட காசநோய் மருத்துவமனை நுழைவாயில் அருகே சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவர் தலையில் ரத்தக்காயத்துடன் இறந்து கிடந்ததை கண்டு, மேற்படி மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் கலைவாணி (51) என்பவர் T12 பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், T12 பூந்தமல்லி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து, இறந்துபோன நபர் ஜெயசங்கர் (30), ராணிபேட்டை மாவட்டம் என்பதும், தலையில் கல்லை போட்டு ஜெயசங்கர் கொலை செய்யப்பட்டள்ளது தெரியவந்தது.
அதன்பேரில், T12 பூந்தமல்லி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், ஜெயசங்கரை கொலை செய்த திருப்பத்தூரை வெற்றிவேல் (எ) பழனிவேல்,(44), என்பரை கைது செய்து அவர்மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.