திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் எரியோடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2016 ஆம் ஆண்டு கலைவேந்தன் 43. என்பவரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த துரைப்பாண்டி 37. என்பவர் கொலை செய்தார். இதையடுத்து எரியோடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து துரைப்பாண்டியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதுதொடர்பான வழக்கு திண்டுக்கல் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்களின் அறிவுறுத்தலின்படி காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.சத்திய பிரபா அவர்கள் மற்றும் நீதிமன்ற முதல் நிலைக் காவலர் திருமதி.கலாராணி ஆகியோரின் சீரிய முயற்சியால் இன்று (07.12.2021) திண்டுக்கல் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி திருமதி.செல்வி.ஜமுனா அவர்கள் குற்றவாளி துரைப்பாண்டிக்கு ஆயுள் தண்டனையும் பணம் ரூபாய் 10,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள்.
இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்ட எரியோடு காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா