தூத்துக்குடி: தூத்துக்குடி கிருபை நகர் பகுதியைச் சேரந்த உச்சிமகாளி மகன் பாண்டி 60. என்பவரை நேற்று 18.01.2023 தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முனியசாமி நகர் பகுதியில் வைத்து மர்ம நபர்கள் கத்தியால் தாக்கி கொலை செய்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த தென்பாகம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தூததுக்குடி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சத்தியராஜ் அவர்கள் மேற்பார்வையில் தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ராஜாராம் தலைமையில் வடபாகம் காவல் நிலைய தலைமை காவலர் திரு. மாணிக்கராஜ், முதல் நிலை காவலர் திரு. மகாலிங்கம், முத்தையாபுரம் காவல் நிலைய முதல் நிலை காவலர் திரு. சாமுவேல், தென்பாகம் காவல் நிலைய காவலர்கள் திரு. திருமணிராஜன், திரு. செந்தில்குமார் மற்றும் முத்தையாபுரம் காவல் நிலைய காவலர் திரு. முத்துப்பாண்டி ஆகியோர் அடங்கிய நகர உட்கோட்ட தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டதில், கொலையுண்ட பாண்டி என்பவர் சம்பவ இடத்தில் பழைய பேப்பர் மற்றும் பாட்டில்களை சேகரித்து கொண்டிருந்தபோது அங்கு வந்த தூத்துக்குடி செல்சீனி காலனியைச் சேர்ந்த குருசாமி மகன் பிரபாகரன் 26. மற்றும் ஓரு இளஞ்சிறார் ஆகியோர் பாண்டியிடம் தகராறு செய்து அவரை கத்தியால் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது.
உடனே தனிப்படை போலீசார் குற்றவாளி பிரபாகரனை கைது செய்தனர். அத்துடன் மேற்படி இளஞ்சிறாரை திருநெல்வெலி அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்துள்ளனர். மேலும் இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.