தென்காசி : தென்காசி மாவட்டம், ஆலங்குளம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பூலாங்குளம் கிராமத்தில் கடந்த மாதம் 8-ந் தேதி முத்துராமலிங்க ராஜன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஆலங்குளம் போலீசார் விசாரணை நடத்தி கடல்மணி என்ற கடற்கரை (40), ராபின் (43), ஆகியோரை கைது செய்தனர். பின்னர் 2 பேரையும் பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திரு.கிருஷ்ணராஜ், பரிந்துரையின் பேரில் தென்காசி தென்காசி திரு.ஆகாஷ், 2 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அதன் பேரில் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.