தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு வல்லநாடு நாணல்காடு பகுதியைச் சேர்ந்த இசக்கிபாண்டி 22 என்பவர் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் 16 குற்றவாளி கைது செய்யப்பட்டனர். அதில் இவ்வழக்கின் இரண்டாவது குற்றவாளியான மாரிமுத்து 26 என்பவர் கடந்த இரண்டு வருடங்களாக தலைமறைவாக இருந்த இலையில் கடந்த 11.08.2021 அன்று முறப்பநாடு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
மேற்படி இவ்வழக்கின் எதிரி மாரிமுத்து மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் திரு. பாஸ்கரன் அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்களிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.மேற்படி காவல் ஆய்வாளரின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.
அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் கே. செந்தில் ராஜ் முறப்பநாடு பக்கபட்டியைச் சேர்ந்த சுப்பையா மகன் மாரிமுத்து என்பவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். மாரிமுத்தை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தார்.