பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், அல்லி நகரம் கிராமத்தில் நடைப்பெற்ற இரண்டை கொலை சம்மந்தமாக குன்னம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேற்படிகுற்றவாளி மணிகண்டன் @ நாட்டாத்தி 22, , காலணி தெரு, மேலஉசேன்நகரம், ஆலத்தூர் வட்டம், பெரம்பலூர் மாவட்டம். என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பரிந்துரை செய்தார்.
பரிந்துரையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் திருமதி. ஸ்ரீ வெங்கட பிரியா இ.ஆ.ப அவர்கள் இன்று (23.08.2021) தேதி மேற்படி குற்றவாளியை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை.