தருமபுரி: தருமபுரி மாவட்டம் அரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான மோப்பிரிப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்லக்கண்ணன் என்பவரை தாக்கி கொலை செய்த சிவக்குமார் 45, முருகேசன் 52. ஆகிய இரு நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு.
அரூர் அடுத்த மோப்பிரிபட்டி கிராமத்தை சேர்ந்த செல்லக்கண்ணன் 37. என்பவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் 52. என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதில் செல்லக்கண்ணன் என்பவர் முருகேசனுக்கு சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கடனாக கொடுத்ததாகவும் அதை கேட்கும் போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு இரும்பு கம்பியால் சிவக்குமார் மற்றும் முருகேசன் ஆகிய இருவரும் செல்லக்கண்ணனை தாக்கியுள்ளனர்.
பலத்த காயமடைந்த செல்லக்கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் இதையடுத்து அரூர் காவல் நிலைய போலிசார் விசாரணை மேற்கொண்டு கொலைக்கு காரணமாக குற்றவாளிகள் சிவக்குமார் 45. மற்றும் முருகேசன் 52. ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.