சேலம் : சேலம் மாவட்டம், தலைவாசல் காவல் நிலைய சரகம் தெற்கு காட்டுக்கோட்டை வரகூர் பகுதியை சேர்ந்த பெருமாள் (49) மற்றும் அதே ஊரை சேர்ந்த அங்கமுத்து (54) இருவரும் கொத்தனார் சங்கத்தில் உறுப்பினராக உள்ளனர் இந்த (22/5/2015), ஆம் தேதி கொத்தனார் சங்கத்தின் சார்பாக சுற்றுலா செல்லும்போது சங்கத்தில் உறுப்பினராக இல்லாத நபரை சுற்றுலா அழைத்து வந்ததால் அங்கமுத்து என்பவர் சங்கத்தில் உறுப்பினராக இல்லாத நபரை எதற்கு அழைத்து வந்த என கேட்க பெருமாள் மற்றும் அங்கமுத்து ஆகியோருக்கு தகராறு ஏற்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக அங்கமுத்து தனது மனைவி மற்றும் மகள் வசம் கூறி மீண்டும் பெருமாள் மற்றும் அங்கமுத்து ஆகியிருக்கு தகராறு ஏற்பட்டு பெருமாள் அவர்களை அங்கமுத்து அவரது மனைவி செல்வி மற்றும் ஆகியோர்கள் ஒன்று சேர்ந்து கட்டையால் அடித்து கொலை செய்த குற்றத்திற்காக தலைவாசல் காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு இவ்வழக்கில் விரைவாக குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்து வழக்கானது சேலம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது இந்நிலையில் சாட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு இன்று நீதிபதி திரு.ஜெகநாதன் அவர்களால் குற்றவாளி அங்கமுத்துக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூபாய் 10,000 அபராதமும் குற்றவாளி செல்வி மற்றும் கௌதமி ஆகியோர்களை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கி குற்றவாளி அங்கமுத்துவை கோவை மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்