தூத்துக்குடி : கடந்த (12/07/2022), அன்று திருச்செந்தூர் ராணி மகாராஜபுரம் பகுதியை சேர்ந்த சரவணக்குமார் (39), என்பவரை குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அம்மன்புரம் பகுதியில் உள்ள ஒரு டீக்கடை அருகில், முன்விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கில் திருச்செந்தூர் ராணி மகாராஜபுரம் பகுதியை சேர்ந்தவர்களான கேசவன் (44), திருப்பதி முத்துசெல்வம் (24), பழையகாயல் பகுதியை சேர்ந்தவர்களான சிவபெருமாள் (எ) சிவா (26) முத்துராஜா (எ) பாபுராஜா (20), ஆகிய 4 பேரை குரும்பூர் காவல் நிலைய காவல்துறையினர், கைது செய்தனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன், அவர்கள் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் திரு. கே. செந்தில்ராஜ் இ.ஆ.ப, அவர்கள் திருச்செந்தூர் ராணி மகாராஜபுரம் பகுதியை சேர்ந்த குற்றவாளி 4 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் குரும்பூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.ராமகிருஷ்ணன், மேற்படி 4 குற்றவாளிகளையும் இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தார். இந்த ஆண்டு இதுவரை போக்சோ வழக்குகளில், சம்மந்தபபட்ட 10 பேர் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 36 பேர் உட்பட 167 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.