மயிலாடுதுறை: மயிலாடுதுறை காவல் நிலைய சரகம், திருவிழந்தூர், ஆஞ்சநேயர் கோவில் அருகே 20.03.2024ம் தேதி இரவு மயிலாடுதுறை கலைஞர் காலணியை சேர்ந்த 1.அஜித்குமார் 26, மற்றும் 2.சரவணன் 30, ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றபோது அடையாளம் தெரியாத சில நபர்கள் வழிமறித்து இருவரையும் அரிவாளால் தாக்கியதில் அஜித்குமார் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்தில் இறந்தார்.
அவருடன் வந்த சரவணன் என்பவருக்கு முகம் மற்றும் காலில் வெட்டு காயம் ஏற்பட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார். மேற்படி காயம்பட்ட சரவணனிடம் வாக்குமூலம் பெற்று 21.03.2024 காலை 02.30 மணிக்கு மயிலாடுதுறை காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, தப்பியோடிய குற்றவாளிகளை கைது செய்ய நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடி வந்தனர்.
இந்நிலையில் 21.03.2024 மதியம் 14.30 மணியளவில் மேற்படி கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளான 1.மில்கி (எ) சந்திரமோகன் 2), மயிலாடுதுறை, 2. சதீஷ் 22, மணக்குடி, 3. பாம் பாலாஜி (எ) பாலாஜி 29, மயிலாடுதுறை, 4. ஆவன்னா (எ) ஸ்ரீராம் 26, சித்தமல்லி, 5. சந்திரமெளலி 23, திருவிழந்தூர், 6.மோகன்தாஸ் 28, வக்காரமாரி, 7. சத்தியநாதன் 21, மயிலாடுதுறை ஆகியோர்களை தனிப்படை காவல் ஆளிநர்கள் கைது செய்து, நிலையம் அழைத்து வந்து நீதிமன்ற அடைப்பு காவலுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேற்படி, கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை சம்பவம் நடைபெற்ற 24 மணி நேரத்திற்குள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.