தூத்துக்குடி: தூத்துக்குடியில் இரு வேறு காவல் நிலையங்களில் கொலை குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.
தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம்
தூத்துக்குடி சிவந்தாகுளம் 2வது தெருவைச் சேர்ந்த தங்கப்பாண்டி மகன் முருகேசன்(38) மற்றும் தூத்துக்குடி கணேசன் காலனி 2வது தெருவைச் சேர்ந்த பிச்சைக்கனி மகன் விவேக்(42) ஆகியோர் சிவந்தாகுளம் சந்தனமாரியம்மன் கோவில் அருகே கடந்த 15.09.2019 அன்று கொலை செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான தூத்துக்குடி முனியசாமிபுரம், லோகியா நகரைச் சேர்ந்த மாணிக்கம் செல்லையா மகன் மாணிக்கராஜா @ மணிகண்டன்(22) மற்றும் தூத்துக்குடி, பிரையண்ட்நகர் 8வது தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் மாரிச்செல்வம்(25) ஆகியோரை தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
மேற்படி எதிரிகள் மாணிக்கராஜா @ மணிகண்டன் மற்றும் மாரிச்செல்வம் ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. கிருஷ்ணகுமார், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு அறிக்கை சமர்ப்பித்தார்.
பின் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன் இ.கா.ப அவர்கள் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் திரு. சந்தீப் நந்தூரி இ.ஆ.ப. அவர்கள் எதிரிகள் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின் பேரில் தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. கிருஷ்ணகுமார் மேற்படி எதிரிகள் மாணிக்கராஜா @ மணிகண்டன் மற்றும் மாரிச்செல்வம் ஆகியோரையும் 16.10.2019 அன்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தார்.
முறப்பநாடு காவல் நிலையம்
வல்லநாடு, நாணல்காடு பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன் மகன் இசக்கி பாண்டியன். இவர் 12.09.2019 அன்று தூத்துக்குடி To திருநெல்வேலி சாலை, அகரம் பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது படுகையூர் தெற்கு தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் முருகன் என்ற படுகையூர் முருகன் என்பவர் இசக்கி பாண்டியனை வழிமறித்து முன்விரோதம் காரணமாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து முறப்பநாடு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து முருகன் என்ற படுகையூர் முருகனை கைது செய்தனர்.
எதிரி முருகன் என்ற படுகையூர் முருகனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் திரு. பார்த்திபன் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு அறிக்கை சமர்ப்பித்தார்.
பின் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன் இ.கா.ப அவர்கள் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் திரு. சந்தீப் நந்தூரி இ.ஆ.ப. அவர்கள் எதிரி முருகன் என்ற படுகையூர் முருகனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின் பேரில் தூத்துக்குடி முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் திரு. பார்த்திபன் மேற்படி எதிரி முருகன் என்ற படுகையூர் முருகனை 16.10.2019 அன்று குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தார்.