காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் உட்கோட்டம், சோமங்கலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சங்கர் ( எ ) வெள்ளை 29 என்பவர் பெயிண்டிங கான்ட்ராகட் வேலை செய்துவந்ததாகவும், கடந்த 18.12.21 அன்று சுமார் 21.30 மணியளவில் சஙகரை பழையநல்லூர் பஸ்நிறுத்தம் பின்புறம் உள்ள இடத்தில் தலையில் வெட்டுக்காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இது சம்மந்தமாக சோமஙகலம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டு காவல் ஆய்வாளர்கள் திரு.சுரேந்திரகுமார் மற்றும் திரு.இராஜாங்கம் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு இவ்வழக்கு சம்மந்தமாக தீவிர விசாரணை மேற்கொண்டதில்
1 ) அன்பு 24. என்பவர் இறந்த சங்கர் ( எ ) வெள்ளை என்பவரிடம் பெயிணடராக வேலை செய்துவந்துள்ளார். சம்பவத்தன்று சங்கர் ( எ ) வெள்ளை குற்றவாளி அன்புவை பணிக்கு அழைத்துள்ளார்.
அதற்கு அன்பு மதுபோதையில் பணிக்கு வரமாட்டேன் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்பின்பு குற்றவாளி அன்பு மற்றும் அவரது நண்பர்களான
1 ) நாகராஜ் 21. 2 ) ராஜேஷ் 36. 3 ) வெங்கடேசன் ( எ ) அட்டை வெங்கடேசன் 20.மறறும் 4 ) யுவராஜ் 20 . ஆகியோர் சேர்ந்து சங்கர் ( எ ) வெள்ளையை தலையில் வெட்டி கொலை செய்துள்ளது தெரியவந்ததையடுத்து குற்றவாளிகள் அனைவரும் கைது செயயப்பட்டுள்ளனர்.
இவ்வழக்கில் விரைவாக குற்றவாளிகளை கைதுசெய்த தனிப்படையினரை காவல் கண்காணிப்பாளர் திரு.Dr.M. சுதாகர் அவர்கள் வெகுவாகப் பாராட்டினார்.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்