திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நகர் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குடைபாறைப்பட்டியில் கடந்த 2011 ஆம் ஆண்டு முன்விரோதம் காரணமாக சந்துரு என்பவர் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து கொலை செய்த சுரேஷ் (32), சின்னமுத்து (30) ஆகிய இருவரை திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இது தொடர்பான வழக்கு திண்டுக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு.செ.ஏசு ராஜசேகரன் அவர்களின் முயற்சியால் வழக்கு விசாரணைகள் முடிக்கப்பட்டு நேற்று 26.02.2020 அன்று மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு செல்வி. ஜமுனா அவர்கள் இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கியும், தலா 10,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து குற்றவாளிகள் சுரேஷ் மற்றும் சின்னமுத்து ஆகிய இருவரையும் போலீசார் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா