விருதுநகர் : சிவகாசி பெரியார் காலனியை சேர்ந்த இளம்பெண் 08.08.2020 ஆம் தேதி கொலை செய்யப்பட்டார்.
இவ்வழக்கு குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காக, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவுப்படி, விருதுநகர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.S.மாரிராஜன் அவர்களின் மேற்பார்வையில், சிவகாசி துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரபாகரன் அவர்கள் தலைமையில், காவல் ஆய்வாளர்கள் திரு. இமானுவேல் ராஜ்குமார், திரு.வெங்கடாஜலபதி மற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் திருமதி. காசியம்மாள், திரு.செல்வகுமார் திரு.பாக்யராஜ் திரு.ஆதிஸ்வரன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு, விசாரணை மேற்கொண்டதில், பெண்ணை கொலை செய்தது அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் என்ற கோடீஸ்வரன் என்பதையும், கொலைக்கு உடந்தையாக இருந்த பரமேஸ்வரி மற்றும் சேகர் என்ற டைசன் ஆகிய மூவரை 24 மணி நேரத்திற்குள்ளாக கண்டுபிடித்து கைது செய்தனர்.
இவ்வழக்கில் சிறப்பாக விசாரணை செய்து குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை காவல்துறையினரை, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பெருமாள் IPS அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.