பெரம்பலூர்: கமருனிசா 34 | 21, என்பவரை குற்றவாளிகள் A1. ஆனந்த் 33/18, Slo. செல்லமுத்து, மற்றும் A2.அரவிந்த் 25/21, த/பெ. ராஜ், ஆகியோர்கள் சேர்ந்து கொலை செய்தது சம்மந்தமாக பெரம்பலூர் மாவட்டம், குன்னம் காவல் நிலையத்தில் குற்ற எண் 302/18 U/s, 341, 354, 506 (i), 302 IPC 4 (A)of TNPWH ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேற்படி வழக்கானது நீதிமன்ற விசாரணையில் இருந்து வந்த நிலையின் இன்று எதிரிகளின் மீதான குற்றங்கள் நிறுபிக்கப்பட்ட நிலையில் இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் இருவருக்கும் ரூ. 57, 500 / – அபராதம் என கனம் பெரம்பலூர் மகிளா நீதிபதி திரு. கிரி அவர்கள் தீர்ப்பு வழங்கி உள்ளார்.
மேற்படி குற்றவாளிகள் இருவரும் நீதிமன்றத்தில் கைது செய்து மருத்துவ பரிசோதனைக்கு பிறகு திருச்சி மத்திய சிறைக்கு செல்ல உள்ளனர்.
மேற்படி வழக்கில் சிறப்பாக செயல்பட்டு வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள்தண்டனை வழங்க உறுதுணையாக செயல்பட்ட காவல்துறையினருக்கு பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்கள் பாராட்டுகளைத் தெரிவித்தார்.
என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை