மதுரை: மதுரை மாவட்ட காவல்துறையில் நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகளை தனிப்பட்ட முறையில் கண்காணித்து வழக்குகளுக்கு தண்டனை பெற்றுத்தரும் விதமாக நீதிமன்ற விசாரணை கண்காணிப்பு குழு (Trial Monitoring Committee) அமைக்கப்பட்டு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் காவல் ஆய்வாளர் மற்றும் சார்பு ஆய்வாளர்படி நிலைகளில் நீதிமன்ற விசாரணை கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் பொறுப்பில் சம்மந்தப்பட்ட காவல் நிலைய வழக்குகளின் நீதிமன்ற விசாரணைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் உட்கோட்டம், ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்தில் கடந்த 2016 ம் வருடம் ஆதாய கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் சாந்தி (57) மற்றும் சரவணன் (37) ஆகியோர்களுக்கு எதிராக மதுரை மாவட்ட ஆறாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த மதுரை மாவட்ட ஆறாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி திரு. கிருபாகரன் மதுரம் அவர்கள் மேற்படி வழக்கில் கொலை செய்த குற்றத்திற்காக குற்றவாளி சாந்திக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 20,000/- ம் அபராதமும், சரவணனுக்கு குற்றவாளி 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 10,000/- ம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்துள்ளார்.
அதன்பேரில் மேற்படி நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து கண்காணித்து வழக்கின் சாட்சியங்கள் அனைவரையும் முறையாக நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தி இவ்வழக்கில் எதிரிகளுக்கு அதிக பட்ச தண்டனை பெற்றுத்தருவதற்கு உதவியாக இருந்த மேற்படி விசாரணை கண்காணிப்புக் குழு உறுப்பினர் ஆஸ்டின்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. சாமியப்பன் மற்றும் நீதிமன்றத்தில் துரிதமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த காவல் ஆய்வாளர் திருமதி. சாரதா, நீதிமன்ற தலைமை காவலர் திரு. சதீஷ் சுடர் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டி உள்ளார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்
திரு.விஜயராஜ்