திருநெல்வேலி: திருநெல்வேலிமாவட்டம் கூடங்குளம் காவல் நிலையத்தில் கொலை வழக்குகளில் குற்றவாளியான சிலுவை அருள் சந்துரு19, பிரதீஸ் என்ற சஞ்சய் பிரதீஸ் 19, டென்னிஸ் என்ற சிலுவைமிக்கேல் டென்னிஸ் 21, அதே பகுதியை சேர்ந்த வினிஸ்டர் என்ற அன்றன் சேவியர் வினிஸ்டர் 30, இருதய யோவான் 38, ஆகியோர் கொலை வழக்கில் ஈடுபட்டு சிறையில் இருந்து வருகின்றனர்.
மேலும் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் கல்லால் தாக்கி கொலை செய்த வழக்கில் குற்றவாளிகளான கீழே பெருமாள்புரத்தை சேர்ந்த சிவசங்கர பெருமாள் என்ற பேச்சி 64. மற்றும் சட்டநாதன் 32. மற்றும் சேரன்மகாதேவி பகுதியில் அடிதடி மற்றும் கொலைமுயற்சி வழக்கில் குற்றவாளியான மாரிராஜ் @ என்ற ராசு குட்டி 22, ஆகியோர் பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ. மணிவண்ணன் இ.கா.ப அவர்களின் கவனத்திற்கு வந்ததால்,
மேற்படி குற்றவாளிகளை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில், குற்றவாளிகள் 8 பேரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.















