திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்தலாபுரத்தில் அழகர்சாமி என்பவர் பைக்கில் செல்லும்போது அதே பகுதியை சேர்ந்த சங்கிலி (32) என்பவர் அவரிடம் தகராறு செய்துள்ளார். இதை அறிந்த அழகர்சாமியின் தம்பி கிருஷ்ணமூர்த்தி (27) என்பவர் சங்கிலியிடம் இதுகுறித்து கேட்ட போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு சங்கிலி கிருஷ்ணமூர்த்தியை கத்தியால் மார்பில் குத்தி உள்ளார். இதையடுத்து கிருஷ்ணமூர்த்தி மதுரை அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பட்டிவீரன்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் திரு.குமரேசன் அவர்கள் கொலை செய்த சங்கிலியை பிடித்து விசாரணை செய்து அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அழகுராஜா