ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் அருகே கடந்த பிப்ரவரி மாதம் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 3 சவரன் நகையை பறித்துக்கொண்டு மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர் மேற்கண்ட செயின் பறிப்பு சம்பவத்தில் தலைமறைவாக இருந்து கடந்த மாதம் ஊரடங்கு உத்தரவை மீறி சீகராஜபுரம் பகுதியில் சுற்றித்திரிந்த மூன்று நபரை சிப்காட் காவல் நிலைய போலீசார் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் நகை பறிப்பு மற்றும் பொன்னை ஆற்றில் இவர்களுடன் சேர்ந்து 8 பேர் கடந்த வருடம் மூன்று பேரை கொலை செய்து புதைத்தது தெரிய வந்தது.
மேற்கண்ட மூன்று கொலையாளிகளை பிடிக்க காரணமாக இருந்த சிப்காட் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு திருநாவுக்கரசு உதவி ஆய்வாளர் திரு.வசந்த் மற்றும் காவலர்கள் திரு.வினோத்குமார் திரு.சதீஷ்குமார் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மயில்வாகனன் அவர்கள் 12.05.2020ம் தேதி பாராட்டி சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கினார்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்