திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், புளியங்குளம், விவேகானந்தர் தெருவைச் சேர்ந்த கனகராஜ் என்பவரின் மகன் ஊசிக்காட்டான் என்ற ஊசிப்பாண்டியன் 37 என்பவர் அடிதடி மற்றும் கொலைமுயற்சியில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ. மணிவண்ணன் இ.கா.ப.,அவர்களின் கவனத்திற்கு வந்ததால்,
மேற்படி குற்றவாளியை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க களக்காடு காவல் ஆய்வாளர், திரு. ஜோசப் ஜெட்சன் அவர்களுக்கு அறிவுறுத்தியதன் பேரில், மேற்படி நபரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவின் பேரில், குற்றவாளியை குண்டர் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.