திருவாரூர்: முத்துப்பேட்டை உட்கோட்டம், எடையூர் காவல் சரகம் ஆரியலூர் கீழத்தெருவைச்சேர்ந்தரஜினி@ பெரிய ரஜினி 42 என்பவரை முன்பகை காரணமாக கடந்த 09.07.21 அன்று
மாலை எடையூர் ECR-சாலையில் அப்பகுதியைச்சேர்ந்த மகாதேவன் என்பவரது தரப்பினர் வழிமறித்து வெட்டி கொலை செய்தனர்.
தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் சம்பவ இடம் சென்று பார்வையிட்டு அப்பகுதியில் சாதி ரீதியான அசம்பாவித சம்பவங்கள் நிகழா வகையில் காவலர்களை ஒன்றுதிரட்டி பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டார்கள்.
பின்னர் கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டு கொலைச்சம்பவம் குறித்து தனது நேரடி பார்வையில் விசாரணை மேற்கொண்ட நிலையில் தனிப்படையினர் 24-மணி நேரத்திற்குள் எதிரிகளை அடையாளம் கண்டு குற்றவாளிகள்
1)ராஜேஷ் 2)மகாதேவன் 3)பிரதீப் 4)சம்பத் 5)பொட்ட கார்த்தி@ கார்த்தி 6)ஆனந்த் 7)சிதம்பரம் ஆகிய 07 பேரை கைது செய்து புதுக்கோட்டை சிறையில் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
இதனை தொடர்ந்து மேற்படி பகுதியில் தொடர் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வழக்கில் சம்மந்தப்பட்ட 07 பேர் மீதும் குண்டர் சட்டத்தில்
நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பரிந்துரை செய்தார்கள்.
அதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் திருமதி.ப.காயத்ரி கிருஷ்ணன் IAS., அவர்கள் மேற்படி குற்றவாளிகள் 07 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்கள்.
மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவின்பேரில் எதிரிகள் 07 பேரும்
இன்று (26.07.21) மாலை திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கொலை வழக்கு குற்றவாளிகள் 07 பேரையும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க சிறப்பாக பணிபுரிந்த
முத்துப்பேட்டை உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் திரு.வெள்ளத்துரை, மற்றும் எடையூர் காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினார்கள். மேலும் மாவட்டத்தில் இதுபோன்ற குற்றச்செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.