சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே உள்ள உலக ஊரணி கிராமத்தைச் சேர்ந்த சேகர் என்பவரது மகன் அருண்குமார்(23). இவர் நேற்று மாலையில் நண்பர்களுடன் காளையார்கோவில் அருகே உள்ள மாந்தாளி கண்மாயில் அமைந்துள்ள ஸ்ரீ தர்ம முனிஸ்வரர் கோவில் பகுதியில் இருந்தபோது முன்விரோதம் காரணமாக மூன்று பேர் கொண்ட கும்பல் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிச் சென்று விட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்ட மாவட்ட கண்காணிப்பாளர் திரு.ரோஹித்நாதன் ராஜகோபால் IPS அவர்களின் மேற்பார்வையில், கொலைக் குற்றவாளிகளை 45 நிமிடத்தில் கைது செய்தனர். மேற்படி இறந்த நபர் மற்றும் கொலைக் குற்றவாளிகள் மீது சிவகங்கை மற்றும் கோவை மாவட்டங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. கொலைக் குற்றவாளிகளை விரைந்து சென்று கைது செய்த மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் காவல்துறையினரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.A. ராபர்ட் கென்னடி