திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட மக்கள் நலன் கருதி திருநெல்வேலி காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள் தொடர்ந்து 24 மணி நேரமும் சுழற்சி முறையில் சோதனைச்சாவடி அலுவல், பிக்கட்டிங் அலுவல், ரோந்து அலுவல் மற்றும் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களை கண்காணிக்கும் அலுவல் போன்ற பொதுமக்கள் பாதுகாப்பு நலன் சார்ந்த அலுவல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். காவல் அலுவலர்களின் நலன் கருதி திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படையில் காவல் கண்காணிப்பாளர் திரு.ஓம்பிரகாஷ் மீனா இ.கா.ப அவர்களின் உத்தரவுபடி மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் கர்ப்பிணி பெண் காவலர்களை கொண்டு சுத்தமாகவும், தரமானதாகவும் உள்ள முக கவசங்களை தயாரித்து, காவல் ஆளினர்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 3300 முகக் கவசங்கள் தயாரித்து பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டு உள்ளது.
நெல்லையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
T. சுதன்
தேசிய பொது செயலாளர்
சமூக சேவகர்கள் பிரிவு
திருநெல்வேலி