திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி கவரைப்பேட்டை ஆகிய பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க காவல்துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் இந்த நிலையில் கவரைப்பேட்டை காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவல்துறையினருக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், சேனிடேசர், முககவசம் உள்ளிட்ட பொருட்களை திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி கீ. வேணு. தலைமை செயற்குழு உறுப்பினர் டி. ஜெ. கோவிந்தராஜ் ஆகியோர் கவரைப்பேட்டை காவல் நிலையத்திற்கு நேரடியாக சென்று நிவாரண பொருட்களை வழங்கினர்.
இதில் கும்மிடிப்பூண்டி துணை கண்காணிப்பாளர் ரமேஷ், கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் குமார், உதவி ஆய்வாளர் சிவராஜ், ஒன்றிய கவுன்சிலர் இந்திரா, திருமலை ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்