பெரம்பலூா்: பெரம்பலூா் காவல் நிலையத்தில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு இன்ஸ்பெக்டர் செந்தில்குமாா் தலைமை வகித்து பேசுகையில்,வணிக வியாபாரிகள், உரிமையாளா்கள், ஆட்டோ மற்றும் வாகன ஓட்டுநா்கள் கொரோனோ வைரஸ் நோய்த்தொற்று பரவலைத் தடுக்க சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். வாகனத்தில் பயணிகளை ஏற்றிச் செல்லும்போது முகக் கவசம் அணிவது அவசியம். அத்தியாவசியத் தேவைக்காக வெளியேச் செல்லும்போது மக்கள் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். அறிவிக்கப்பட்ட நேரங்களில் மட்டுமே கடைகளை திறந்திருக்க வேண்டும். இக் கூட்டத்தில் எஸ்ஐக்கள் குணசேகரன், சரவணக்குமாா் மற்றும் வியபாரிகள், டிரைவர்கள் கலந்து கொண்டனர்.