பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கிலும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.நிஷா பார்த்திபன் இ.கா.ப அவர்களின் அறிவுரையின்படி வணிக வியாபாரிகள், உரிமையாளர்கள், ஆட்டோ மற்றும் வாகன ஓட்டுனர்களுக்கு கொரோனோ வைரஸ் நோய்த்தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவுவதை தடுக்க கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், சமூக இடைவெளியை பின்பற்றி வாகனத்தில் ஆட்களை ஏற்றிச் செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளையும், முக கவசம் அணிவதன் அவசியத்தையும் மற்றும் கிருமிநாசினி பயன்படுத்துவது குறித்தும், அத்தியாவசிய தேவைக்காக வெளியே செல்லும் பொதுமக்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும், பொதுமக்களுக்கும், வாகன ஓட்டுநர்களுக்கும் பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார்பாக அனைத்து உட்கோட்ட பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த காவல் துறைக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று கூட்டத்தில் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை