சென்னை : போக்குவரத்து காவல் சார்பில் அமைந்தகரை, அண்ணா ஆர்ச் அருகே பொதுமக்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட கொரோனா விழிப்புணர்வு முகாமில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் கொரோனா விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை துவக்கி வைத்தும். அதில் கலந்துகொண்ட அனைவருக்கும் கபசுரகுடிநீர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திரு. எஸ். கணேஷ் இ.ஆ.ப, இயக்குனர் இந்திய மருத்துவம், கூடுதல் காவல் ஆணையர் (போக்குவரத்து) திருமதி. பவானிஸ்வரி இ.கா.ப., இணை ஆணையர்கள் திரு. எழில் அரசன் இ.கா.ப, திருமதி. செந்தில்குமாரி இ.கா.ப, துணை ஆணையர்கள் திரு. துரை இ.காப., திரு.அசோக் குமார் மற்றும் மருத்துவர் அசோகன் (ஜெம் ஹாஸ்பிடல்) மற்றும் காவல் அதிகாரிகள், ஆளிநர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
