திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் வேடசந்தூர் ,வடமதுரை, குஜிலியம்பாறை உட்பட பல பகுதிகளில் எஸ்.பி.ரவளி பிரியா இன்று ஆய்வு நடத்தினார்.
அப்போது போலீசாரை ஊக்குவிக்க அவர்களுக்கு பாதுகாப்பு உபகாரணங்கள், கிருமிநாசினி, முக கவசம் உட்பட பலவற்றை வழங்கினார். மேலும் கபசுரக் குடிநீர், இனிப்பு, காரம் ,மிளகுப் பால் ஆகியவற்றை வழங்கி போலீசாரை ஊக்கப்படுத்தினார்
சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆதரவற்ற ஏழைகளை 5 பேருக்கு அரிசி, பருப்பு, உட்பட நிவாரண பொருட்களை வழங்கினார் .பொது மக்களிடம் எஸ்.பி.ரவளிபிரியா விழிப்புணர்வு ஏற்படுத்தியதாவது: பொதுமக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும்.
உங்களுக்கு நடமாடும் காய்கறிகள் மளிகை பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களும் வருகிறது. நீங்கள் வீட்டில் தனித்து இருக்க வேண்டும். அருகில் உள்ள வீட்டுடன் பேசும்போது முக கவசம், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கொரோனா உயிர்க்கொல்லி நோய் என்பதை நாம் அறிய வேண்டும்.
இதற்கு ஒரே வழி தடுப்பூசி போடுவது தான் .இதை நாம் மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு செய்ய வேண்டும். இதன் மூலம் நம்மையும் நாட்டையும் காக்க முடியும், என்றார். அவருடன் வேடசந்தூர் டிஎஸ்.பி மகேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா