நாமக்கல்: நாமக்கல் பகுதியில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாகவும் இதனால் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா வைரஸ் பரவி 2 பேர் உயிரிழந்து விட்டதாகவும் மேலும் மற்றவர்களுக்கு கொரோனா தொற்று பரவி வருவதாகவும் ஒரு தவறான தகவல் வாட்ஸ்- அப் மூலம் பகிரப்பட்டு வைரலாக பரவியது.
இது குறித்து நாமக்கல் மாவட்ட காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் நாமக்கல் சந்தைபேட்டை புதூர் பகுதியை சேர்ந்த எலெக்ட்ரீசியன் வேலை செய்து வரும் வரதராஜன் என்பவர் இத்தவறான தகவலை பரப்பி வந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.