தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக அரசு விதித்துள்ள முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி பொது இடங்களில் கொரோனா பரவும் வகையில் செயல்பட்ட 23 பேர் மீது வழக்கு பதிவு – முக கவசம் அணியாத 421 பேருக்கு அபராதம் ரூபாய் 84,200/-ம், சமூக இடைவெளியை கடைபிடிக்காத ஒருவருக்கு அபராதம் ரூபாய் 500/-ம் என மொத்தம் ரூபாய் 84,700/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.ஜெயக்குமார் தகவல்.
தற்போது ஒமைக்ரான் கொரோனா வைரஸ் பரவி வருவதால் பொது இடங்களில் அதிக அளவில் பொதுமக்கள் கூடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று முக கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்களுக்கு தலா ரூபாய் 200/- அபராதமும், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களுக்கு தலா 500/- அபராதமும் விதிக்கப்படுகிறது.
அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று (23.01.2022) தமிழக அரசு விதித்துள்ள முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்ட 23 பேர் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று (23.01.2022) பொது இடங்களில் முககவசம் அணியாத தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் 140 பேர் மீதும், தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் 48 பேர் மீதும், திருச்செந்தூர் உட்கோட்டத்தில் 24 பேர் மீதும், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் 84 பேர் மீதும், மணியாச்சி உட்கோட்டத்தில் 37 பேர் மீதும், கோவில்பட்டி உட்கோட்டத்தில் 26 பேர் மீதும், விளாத்திகுளம் உட்கோட்டத்தில் 14 பேர் மீதும், சாத்தான்குளம் உட்கோட்டத்தில் 48 பேர் மீதும் என மொத்தம் 421 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூபாய் 84,200/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம் உட்கோட்டத்தில் சமூக இடைவெளி கடைப்பிடிக்காத ஒருவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூபாய் 500/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
முக கவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்காதவர்களுக்கு மொத்தம் ரூபாய். 84,700/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அனைவரும் கொரோனா பரவலை தடுக்கும்பொருட்டு தமிழக அரசு அறிவித்துள்ள விதிகள் மற்றும் நெறிமுறைகளை கடைபிடித்து முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி நம்மையும் காப்பாற்றி, நம்மால் பிறருக்கு தொற்று பரவாமல் பிறரையும் காப்பாற்ற வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.ஜெயக்குமார் அவர்கள் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.