திருவள்ளூர் : தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மே 24ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் முழு ஊரடங்கு குறித்த கட்டுப்பாடுகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக மாவட்டத்து மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க கூட இ-பதிவு முறை கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நடைமுறை இரு தினங்களுக்கு முன்பு கட்டாயமாக்கப்பட்டது. இந்த நிலையில் திருவள்ளூரில் கொரோனா தொற்று அதிகம் பரவிவரும் நிலையில் திருவள்ளூர் டவுன் காவல்நிலைய காவலர்கள் காமராஜர் சிலை மற்றும் மணவாளனகர் காவல்நிலைய காவலர்கள் இந்திராகாந்தி சிலை ஆகிய இடங்களில் சோதனை மேற்கொண்டனர். காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே வெளியே செல்ல அனுமதித்தனர், இருப்பினும் நம் மக்கள் வெளியே சுற்றித்திரிந்து வருகின்றனர். இதை கட்டுபடுத்த வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
திருவள்ளூரில் இருந்து
போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்
திரு. பக்தவத்சலம்