திருவாரூர்: கொரோனா தொற்று பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி திருவாரூர் மாவட்ட பொதுமக்கள் அனைவரும் பயமின்றி 100% கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தி தருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் திருவாரூர் நகர பகுதிகளில் தனது அதிரடிப்படை காவலர்களுடன் சைக்கிள் ஓட்டிச்சென்று பொதுமக்களை சந்தித்து விழிப்புணர்வு மற்றும் பிரச்சாரம் செய்தார்கள். இப்பேரணி திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில்
இன்று(25.06.21) மாலை 18.00 மணிக்கு துவங்கி திருவாரூர் துர்காலயா சாலை, சன்னதி தெரு மருதபட்டினம், நெய்விளக்குதோப்பு,
பெரிய கடைத்தெரு, பழைய பேருந்துநிலையம் வழியாக சுமார் 10 கி.மீதூரம் சென்று அழகிரிகாலனியில் மாலை 20.00மணிக்குமுடிக்கப்பட்டது பின்னர் அழகிரி காலனியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பொதுமக்கள் மற்றும் சிறுவர்களை சந்தித்து கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு,காவல்துறை நட்புறவு,கல்வியின் அவசியம் சாலை பாதுகாப்பு மற்றும் நோயில்லா வாழ்க்கைமுறைகள் பற்றி உரையாற்றிசிறுவர்களுக்கு புத்தகங்களை பரிசு அளித்தார்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தினார்கள்.
மக்கள் சேவையில்…
திருவாரூர் மாவட்ட காவல்துறை