திருவாரூர்: கொரோனா தொற்றுபாதுகாப்புமற்றும்முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி திருவாரூர் மாவட்ட பொதுமக்கள் அனைவரும் பயமின்றி 100% கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் திருத்துறைப்பூண்டி நகர பகுதிகளில் தனது அதிரடிப்படை காவலர்களுடன் சைக்கிள் ஓட்டிச்சென்று
பொதுமக்களை சந்தித்து விழிப்புணர்வு மற்றும் பிரச்சாரம் செய்தார்கள்.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவராகள் தலைமையிலான சைக்கிள் பேரணியை திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் திரு.மாரிமுத்து அவர்கள் திருத்துறைப்பூண்டி புதிய பேருந்துநிலையத்தில் இன்று(25.06.21) மாலை 18.30 மணிக்கு துவங்கி
வைத்தார்கள். பின்னர் விழிப்புணர்வு பேரணி அண்ணாசிலை, மீனாட்சிவாய்க்கால், ECR-ரவுன்டானா, வேதைமுக்கம், வழியாக சுமார் 10 கி.மீ தூரம் சென்று பின்னர் மாலை 20.00 மணிக்கு திருத்துறைப்பூண்டி புதிய பேருந்துநிலையத்தில் முடிக்கப்பட்டது. பின்னர்
தமிழக காவல்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் *திருத்துறைப்பூண்டி பாய்ஸ் கிளப் சென்று சிறுவர்,சிறுமியர்களை சந்தித்து அவர்களை உற்சாகப் படுத்தினார்கள் மேலும் பேரணியின்போது பொதுமக்களை சந்தித்து கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு, காவல்துறை நட்புறவு,
கல்வியின் அவசியம் சாலை பாதுகாப்பு மற்றும் நோயில்லா வாழ்க்கைமுறைகள் பற்றி உரையாற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.
மக்கள் சேவையில்…
திருவாரூர் மாவட்ட காவல்துறை