திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் காவல்துறையினர் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணியிலும், விழிப்புணர்வு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு நோய் தடுப்பு மூலிகை தேநீர் வழங்கும் நிகழ்ச்சியை திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.எம்.எஸ்.முத்துசாமி இ.கா.ப அவர்கள் துவக்கி வைத்தார்கள்.
மேலும் காவல்துறையினருக்கு நோய் தொற்றிலிருந்து தங்களையும், தங்களை சார்ந்தவர்களையும், பொதுமக்களையும் எவ்வாறு தற்காத்துக் கொள்வது குறித்த அறிவுரைகளை வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ரவளி பிரியா இ.கா.ப அவர்களும், திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.ஆறுமுகம் அவர்களும் கலந்து கொண்டு காவல்துறையினருக்கு அறிவுரைகள் வழங்கினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
