தென்காசி: தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கிருஷ்ணராஜ் IPS அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு,போதை பொருட்களின் தீங்கு,குழந்தை திருமணம் மற்றும் கொரோனா குறித்து தென்காசி மாவட்ட காவல்துறையினர்தொடர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
இதேபோல் சிவகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சீனிவாசராவ் தெருவிலுள்ள பொதுமக்களிடம் காவல்துறையினர் சாலை பயணங்களின் போது தலைக்கவசம் சீட் பெல்ட் அணிந்து பாதுகாப்பாக பயணம் செய்ய வேண்டும் எனவும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது என்றும் கொரோனா மற்றும் முகக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
மேலும் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு தங்களையும் தங்களின் குடும்பத்தின் நலனை யும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினர்.