பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் பரவி வரும் கொரோனா இரண்டாம் நிலை பரவலை கட்டுப்படுத்த காவல்துறை சார்பில் கொரோனா கட்டுப்பாட்டு அறை அமைத்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் திருச்சி மண்டலத்திற்கு என சிறப்பு கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான முன்னேச்சரிக்கை நடவடிக்கை கண்காணிக்க தமிழக அரசால் திரு.அமரேஷ் புஜாரி இ.கா.ப, கூடுதல் காவல்துறை இயக்குனர் (தொழில்நுட்பம்) என்பவரை நியமித்தது.
இந்நிலையில் இன்று 19.05.2021 பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இயங்கி வரும் கொரோனா கட்டுப்பாட்டு அறையை திரு.அமரேஷ் புஜாரி இ.கா.ப, கூடுதல் காவல்துறை இயக்குனர் (தொழில்நுட்பம்) பார்வையிட்டார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோன தொற்று தற்போது அதிகமாக பரவி வருவதால் நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜனேற்ற படுக்கைகள் மற்றும் ஆக்ஸிஜன் இருப்பு, பற்றாக்குறைகள் பற்றிய தகவல்களையும், கொரோனா பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு உடமைகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
மேற்படி ஆய்வின் போது பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.நிஷா பார்த்திபன் இ.கா.ப , பெரம்பலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திரு.ஆரோக்கிய பிரகாசம், திரு.நீதிராஜ், திரு.சுப்பிரமணி, துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.ரவிசந்திரன், திருமதி.ரஞ்சனா கொரோனா கட்டுப்பாட்டு அறை காவல் ஆய்வாளர் மற்றும் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு. வெங்கடேசுவரன் ஆகியோர்கள் உடனிருந்தனர்.