ராணிப்பேட்டை : கொரோனா தொற்று நோயின் இரண்டாம் அலை வேகமாகப் பரவி வருவதால் தமிழக அரசு கடந்த 10.05.2021 முதல் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தி உள்ளது ராணிப்பேட்டை மாவட்டத்தில் காவல் துறையின் சார்பாக முழு ஊரடங்கி நிறைவேற்ற ராணிப்பேட்டை மாவட்டத்தில் திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் போன்ற மாவட்டங்கள் எல்லையாக அமைந்திருக்கின்றன.
அங்கிருந்து வரும் மக்களை சோதனை செய்ய 17 சோதனைச் சாவடிகளும் மாவட்டத்திற்குள் முக்கியமான இடங்களில் 32 வாகன சோதனை சாவடிகளும் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மேலும் 15 நான்கு சக்கர வாகனங்களும், 55 இரண்டு சக்கர வாகனங்களிலும் காவலர்களும் அதிகாரிகளும் ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர். மாவட்டத்தில் முறையாக விதிமுறைகளை பின்பற்றாமலும், முக கவசம் அணியாமல் வந்த 1600 பேர் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளன. முறையான கடவுச் சீட்டு இல்லாமல் வந்த 320 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன இதுபோன்ற சம்பவங்கள் காவல்துறையினருக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்துகின்றது.
இது பொது மக்களுக்காகவும் உலக நன்மைக்காகவும் இந்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறுவதும் அவர்களுக்கு தண்டனை அளிப்பதும் அபராதம் விதிப்பதும் தேவையற்ற ஒன்று. இதை பொதுமக்கள் தாங்களாகவே உணர்ந்து சுய கட்டுப்பாட்டுடன் வீட்டிலேயே இருக்க வேண்டும். என்று பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார் மாவட்ட கண்காணிப்பாளர் Dr. R. சிவக்குமார் IPS அவர்கள்.
நமது குடியுரிமை நிருபர்
திரு.கஜேந்திரன்
இராணிப்பேட்டை மாவட்ட பொது செயலாளர் -ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா
அரக்கோணம்