காவல்துறையில் கொரானா தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டு இருந்த சென்னை மாநகர , மாம்பலம் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் திரு.பாலமுரளி அவர்கள் கொரோன தொற்றால் ( 17.06.2020 ) அன்று உயிர் நீத்தார் . அவரது ஆன்மா சாந்தியடைய மேற்கு மண்டல காவல் துறை தலைவர் திரு.கு.பெரியய்யா இ.கா.ப அவர்கள் முன்னிலையில் அலுவலகத்தில் ( 18.06.2020 ) இன்று மாலை 5 மணிக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட 8 மாவட்டங்களில் மௌன அஞ்சலி செலுத்த பட்டது.
நாகப்பட்டினம் : கொரோனா தொற்று நோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த சென்னை மாம்பலம் காவல் ஆய்வாளர் திரு.பாலமுரளி அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் அவரது இழப்பு தமிழக காவல்துறைக்கு சோகத்தை ஏற்படுத்தியது அவரை பிரிந்து வாழும் குடும்பத்தினருக்கு நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை சார்பில் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகாப அவர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.
தர்மபுரி: சென்னை பெருநகர காவல்துறை மாம்பலம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த காவல் ஆய்வாளர் திரு.பாலமுரளி அவர்கள் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றும் சீரிய பணியில் இருந்த போது நோய் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தவர் (17/06/2020) அன்று அவரது இன்னுரை மக்களை காக்கும் பணிக்காக தியாகம் செய்துள்ளார். அன்னாரது தியாகத்தை போற்றும் விதமாக அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டியும்(18/06/2020) இன்று தர்மபுரி மாவட்ட காவல் துறையின் சார்பாக அனைத்து காவல் நிலையங்களிலும் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இராணிப்பேட்டை : கொரோனாவுக்கு எதிரான போரில் மக்களின் பாதுகாப்பிற்காக போராடி வீரமரணம் அடைந்த சென்னை மாம்பலம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.பாலமுரளி அவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தும் வண்ணம் இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. மயில்வாகனன் அவர்கள் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் காவலர்கள் அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
மதுரை: சென்னை பெருநகரில் மாம்பலம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த திரு.S.பாலமுரளி அவர்கள் கொரோனா நோய் தொற்றிலிருந்து மக்களை காக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது நோய் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி 17.06.2020 ம் தேதி அவரது உயிர் பிரிந்தது. காவல்துறை தலைமை இயக்குநர் திரு.J.K.திரிபாதி¸ இ.கா.ப.¸ அவர்கள் உத்தரவுப்படி இன்று 18.06.2020 ம் தேதி அவரது ஆத்மா சாந்தி அடைய மதுரை மாநகரில் பணிபுரிந்துவரும் அனைத்து காவல்துறையினரும் அவர்கள் பணி செய்யும் இடங்களிலேயே 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.